×

திருப்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 153 மனுக்கள் பெறப்பட்டது-விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

திருப்பதி : திருப்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 153 மனுக்கள் பெறப்பட்டது.திருப்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் ஸ்பந்தனா மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெங்கட ரமணா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும், மனுக்குள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில், பொது மக்களிடம் இருந்து 153 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான ஆன்லைன் பதிவு ரசீதுகள் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அதிகாரி சீனிவாச ராவ், பயிற்சி துணை ஆட்சியர் லேகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

துறை ரீதியாக பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் விவரம்: வருவாய்த் துறை 107, காவல் துறை 9, பதிவுத் துறை 1, மாநகராட்சி 2, பஞ்சாயத்து ராஜ் 4, பிசி நலத் துறை 1, ஐசிடிஎஸ் 3, வீட்டுவசதி 5, த்வாமா 1, சர்வேயர் 4, ஆர்டிசி 1, வனத்துறை 1, தேவதாயா துறை 2, டிசிஎச்ஸ் 1, குருகுல பள்ளி 1, டிஎம்எச்ஓ 2, தொழிலாளர் 2, மாவட்டக் கல்வித் துறை 1, நீர்ப்பாசனத் துறை 1, மின்சாரத் துறை 2 உள்ளிட்ட மொத்தம் 153 மனுக்கள் பெறப்பட்டது.

The post திருப்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 153 மனுக்கள் பெறப்பட்டது-விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirupati District Ruler's Office ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...